செயலாளர் நாயகம் காணொளி செய்தி: உலகிற்கு ஒரு எச்சரிக்கை

செயலாளர் நாயகம்
காணொளி செய்தி: உலகிற்கு ஒரு எச்சரிக்கை
1 ஜனவரி 2018

உலகம் முழுவதும் உள்ள அன்பு நண்பர்களே,

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


(UNIC Photo: Art by a student of Tamil Vidyalaya, Rajagiriya)

ஒரு வருடம் முன்பு நான் பதவி ஏற்றபோது, 2017 ஆனது சமாதானத்துக்கான ஆண்டாக அறிவிப்பு விடுத்தேன், துரதிருஷ்டவசமாக – அடிப்படை வழிகளில், உலகம் தலைகீழாக போய்விட்டது.

2018 புத்தாண்டு தினத்தில், நான் அறிவிப்பை வெளியிடவில்லை. பதிலாக நான் ஒரு எச்சரிக்கை வழங்குகிறேன் – நமது உலகிற்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை.
மோதல்கள் ஆழமடைந்துள்ளன, புதிய ஆபத்துகள் வெளிப்பட்டுள்ளன.

அணு ஆயுதங்களைப் பற்றிய உலகளாவிய கவலைகள் பனி போர் பின்னர் மிக அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றம் நம்மை விட வேகமாகவே நகர்கிறது. ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

மனித உரிமைகள் பற்றிய கொடூரமான மீறல்களை நாங்கள் காண்கிறோம்.

தேசியவாதம் மற்றும் இனவெறி ஆகியவை அதிகரித்து வருகின்றன.

நாங்கள் 2018 ஐ தொடங்கும் போது, நான் ஒற்றுமைக்காக அழைக்கிறேன்.

நம் உலகத்தை இன்னும் பாதுகாப்பாக மாற்றமுடியும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

நம் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளமுடியும், வெறுப்பை வென்று பகிரப்பட்ட மதிப்புக்களை பாதுகாக்க முடியும்.

ஆனால் நாம் அதனை ஒன்றாகத்தான் செய்யமுடியும்.

அனைத்து நாட்டு தலைவர்களையும் புதுவருட தீர்மானம் எடுக்க கேட்டுக்கொள்கிறேன் இடைவெளிகளைக் குறைக்கவும். பிரிவினைகளை நல்வழியில் கட்டியெழுப்பவும். பொதுவான குறிக்கோள் மூலம் மக்களைக் கொண்டு வருவதன் மூலம் நம்பிக்கையை மீண்டும் உருவாக்கவும்.

ஒற்றுமையே பாதை. நம் எதிர்காலம் அது சார்ந்திருக்கிறது.

2018 ஆனது உங்களுக்கு சமாதானமாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைய விரும்புகிறேன்


(UNIC Photo – Art by a student from Tamil Vidyalaya, Rajagiriya)

United Nations Information Centre ,202-204, Bauddhaloka Mawatha, Colombo 7, Sri Lanka •
• Telephone: 94 (11)2580691-8 Ext. 2100/2101/2102 Fax: 94 (11) 2581116 • Mobile: 077 3134308
E-Mail: unic.colombo@unic.org Web: http://colombo.unic.org